உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநள்ளார் கோவிலில் 3 லட்சம் பேர் தரிசனம்!

திருநள்ளார் கோவிலில் 3 லட்சம் பேர் தரிசனம்!

காரைக்கால் : திருநள்ளார் சனீஸ்வர பகவானை நேற்று 3 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலில் கடந்த மாதம் 21ம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து வந்த ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் கோவிலுக்கு பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் தரிசனத்தில் மட்டும் 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சாமியை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து தரிசன வழிகளில் பக்தர்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு காத்திருந்தனர்.

கைடுகளாக செயல்பட்ட போலீஸ்: சனி பகவானை தரிசிக்க வரும் பக்தர்கள் 300,100 ரூ கட்டணம் செலுத்தி கால் கடுக்க நின்றிருந்த வேளையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், வெளி மாநில முக்கியஸ்தர்களை கண்டுபிடித்து, அவர்களிடம் ஒரு தொகையை பெற்றுக் கொண்டு, அனைத்து கெடுபிடிகளையும் கடந்து சுவாமியை தரிசிக்க ஏற்பாடு செய்தனர். இதனால், வரிசையில் நெடுநேரம் காத்திருந்த பக்தர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருநள்ளாரில் 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்ததால், பக்தர்களின் வாகனங்களால் திருநள்ளாறு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இவற்றை போக்குவரத்து போலீசார் சரி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !