உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் திருவிழா: அக்னி சட்டி ஏந்தி பக்தர்கள் பரவசம்

மாரியம்மன் கோவில் திருவிழா: அக்னி சட்டி ஏந்தி பக்தர்கள் பரவசம்

கரூர்: மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி, பால் குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். கரூர், வேம்பு மாரியம்மன் கோவிலில், சித்திரை திருவிழா, கடந்த, 9ல், கணபதி ஹோமத்துடன் துவங்கியது. கடந்த, 15ல் அம்மனுக்கு பொங்கல் விழா நடந்தது. நேற்று காலை, அமராவதி ஆற்றிலிருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம், தீர்த்தக் குடம் அக்னிச் சட்டி எடுத்துச் சென்று, நேர்த்திக் கடன் செலுத்தினர். சிறப்பு அபிஷேகம், பூஜைக்குப் பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை கரகம் எடுத்து காவிரி ஆற்றில் விடுவதுடன், விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !