உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்

திருச்சி: திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை பெருந்திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று(ஏப்,17ல்) கோலாகலமாக நடைபெற்றது.  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர். தேரோட்டத்தை தொடர்ந்து நாளை 18ம் தேதி வெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 20ம் தேதி தெப்ப உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !