அன்னபூரணி அவதாரம்
ADDED :2778 days ago
உலக உயிர்களுக்கு படியளிக்கும் அம்பிகை அன்னபூரணியாக விளங்குகிறாள். அவள் அவதரித்தநாள் அட்சய திரிதியை. அவள் வைத்திருக்கும் அன்னபாத்திரம் அள்ள அள்ளக் குறையாது. இந்நாளில் செய்யும் தானம், தர்மம், யாகம் இவற்றுக்கு மிகுந்த புண்ணியம் உண்டு. அன்னதானம் அளித்தல், கோடையின் வெப்பம் தணிக்க தண்ணீர் பந்தல், நீர்மோர், குடை, காலணி வழங்குதல் ஆகியவையும் தானதர்மத்தில் அடங்கும்.