உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலை முருகன் கோவிலில் அபிஷேக முறையில் திடீர் மாற்றம்

சென்னிமலை முருகன் கோவிலில் அபிஷேக முறையில் திடீர் மாற்றம்

சென்னிமலை: சென்னிமலை, மலை முருகன் கோவிலில், அபிஷேக நடைமுறை, திடீரென மாற்றப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட அளவில், பிரசித்தி பெற்ற கோவிலாக, சென்னிமலை முருகன் கோவில் உள்ளது. முருகப்பெருமான் மூலவருக்கு, பக்தர்கள் கொண்டு வரும் பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்டவற்றின் மூலம், அதிகாலை, 5:00 மணி முதல் இரவு, 8:00 வரை, எப்போது கொண்டு வந்தாலும், அபிஷேகம் செய்யப்படும். இந்த நடைமுறை, பல நூறு ஆண்டுகளாக கடைபிடிக்கப்படுகிறது. சென்னிமலை முருகனுக்கு தயிர் அபி?ஷகம் சிறப்பு. இங்கு பூஜிக்கப்படும் தயிர் புளிக்காது என்பது ஐதீகம். இந்த முறையில், தற்போது திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனிமேல் பக்தர்கள் நினைத்த நேரத்தில், மூலவருக்கு அபி?ஷகம் செய்ய முடியாது. தற்போது ஐந்து கால பூஜை நடக்கிறது. இந்த வேளைகளில் மட்டும், பக்தர்கள் கொண்டு வரும் பொருட்கள் மூலம், மூலவருக்கு அபி?ஷகம் செய்யப்படும், என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மற்ற நேரங்களில், மூலவர் முன்புள்ள உற்சவர் சிலைக்கு, அபிஷேகம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்புக்கு ஆதரவு, எதிர்ப்பு ஒரு சேர கிளம்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !