விராலிமலை முருகன் கோவிலுக்கு குளித்தலை பக்தர்கள் பாதயாத்திரை
ADDED :2767 days ago
குளித்தலை: குளித்தலை பகுதியில், 47வது ஆண்டாக, முருக பக்தர்கள், 108 காவடி எடுத்து, விராலிமலைக்கு பாதயாத்திரை புறப்பட்டனர். குளித்தலை அடுத்த திம்மம்பட்டி, சத்தியமங்கலம், அய்யர்மலை, வை.புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த முருக பக்தர்கள், ஆண்டுதோறும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள, விராலிமலை முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்கின்றனர். 47வது ஆண்டு யாத்திரை நேற்று காலை துவங்கியது. பக்தர்கள் கடம்பர்கோவில் காவிரி ஆற்றில் நீராடி, கடம்பவனேஸ்வரரை வழிபட்டனர். பின், 108 காவடிகளை எடுத்துக்கொண்டு, மேளதாளத்துடன் பாதயாத்திரை புறப்பட்டனர்.