ஆண்டாள் கோயிலில் நீராட்ட உற்சவம் துவக்கம்!
ADDED :5058 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், மார்கழி நீராட்ட உற்சவத்தையொட்டி, எண்ணைய் காப்பு சேவை நடந்தது. மார்கழி நீராட்ட உற்சவத்தில், நேற்று காலை ஆண்டாள் தங்க பல்லக்கில் கோபுர வாசலில் போர்வை படி களைந்து, திருவடி விளக்கம் பெறுதல் நடந்தது. நாடகசாலை ஸ்ரீனிவாசன் சன்னதி விடாயாற்றியாகி, எண்ணைய் காப்பு மண்டபம் சேர்ந்தார்.தொடர்ந்து திருத்திரை வாங்குதலும், திருவாராதனம் பட்டர்பிரான் சுருள் கோஷ்டியும் நடந்தது. மாலை 3 மணிக்கு எண்ணைய் காப்பு சேவையும், ÷ஷாடச உபசாரமும் நடந்தது. பின், ஆண்டாள் பக்தி உலாவுதலும், நீராட்ட தொட்டிக்கு எழுந்தருளி திருமஞ்சனம், ஆண்டாள் புறப்பாடு நடந்தது. அதைத்தொடர்ந்து, அம்மானை விளையாடுதல் படியேற்ற சேவை நடந்தது. இரவில் துளசி வாகனத்தில் ஆண்டாள் புறப்பாடு நடந்தது. மார்கழி நீராட்ட விழா 15 ம் தேதி வரை நடக்கிறது.