உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானாமதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் நேரத்தில் மாற்றம்

மானாமதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் நேரத்தில் மாற்றம்

மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயிலில் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.  முக்கிய நிகழ்ச்சியான ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி சித்ரா பவுர்ணமியன்று காலை 10:00 –11:30 மணிக்கு நடைபெறும். பின்னர் ஆயிரம்பொன் சப்பரத்தில் அழகர் எழுந்தருள்வார். இந்த ஆண்டு ஏப்.29 காலை 7:00 மணி முதல் மறுநாள் காலை 6:40 மணி வரை பவுர்ணமி உள்ளது. இதனால் இந்த ஆண்டு அழகர் இறங்கும் நிகழ்ச்சி ஏப்.30 காலை 6:00 – 6:30 மணிக்குள் நடைபெறும் எனசிவகங்கை தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். முதல்நாள் இரவு 10:00 – 11:00 மணிக்கு எதிர்சேவை நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !