அக்னி மாரியம்மன் தீ மிதி விழா
ஓமலுார்: தீ மிதி விழா, கோலாகலமாக நடந்தது. காடையாம்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி அருகே, பாபுசெட்டிப்பட்டி, அக்னி மாரியம்மன் கோவில் பண்டிகை, கடந்த, 3ல் துவங்கியது. நேற்று காலை, தீ மிதி நடந்தது. அதில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, அன்னதானம், உருளுதண்டம், மாவிளக்கு சீர்வரிசை, வேப்பிலை கரகம், அலகு குத்துதல் ஆகியவை நடந்தது. இன்று மதியம், மஞ்சள் நீராட்டுதலுடன், விழா நிறைவடையும்.
* தலைவாசல், காட்டுக்கோட்டை, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், சித்திரை திருவிழாவையொட்டி, நேற்று, ஊரணி பொங்கல் வைக்கப்பட்டது. அதில், பெண்கள் பலர், அம்மனுக்கு பொங்கல் வைத்து வணங்கினர். மாலை, மஞ்சள் நீராட்டுடன், விழா நிறைவடைந்தது.
* மகுடஞ்சாவடி, இடங்கணசாலை அருகே, கே.கே.நகரில், சமயபுரத்து மாரியம்மன் கோவில் உள்ளது. அங்கு, நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தினமும், சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கும். வரும், 25 காலை, சக்தி அழைத்தல், கரகம் எடுத்தல், முளைப்பாரி எடுத்தல், இரவு, பாராநடத்தல், 26 காலை, பூங்கரகம் எடுத்தல், பொங்கல் வைத்தல், மாலை, அம்மன் அழைப்பு, அலகு குத்துதல், மாவிளக்கு எடுத்தல், அக்னி கரகம் எடுத்தல், 27ல் விளையாட்டு போட்டி, வண்டி வேடிக்கை ஆகியவை நடைபெறும்.