உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமேஸ்வரனின் கையிலுள்ள வில்லுக்கு என்ன பெயர் தெரியுமா?

பரமேஸ்வரனின் கையிலுள்ள வில்லுக்கு என்ன பெயர் தெரியுமா?

சிவ சகஸ்ரநாமம், மகாபாரதத்தில் அனுஸாஸன பர்வதத்தில் உள்ளது. இது, பகவான் வாசுதேவனால் அருளப்பட்டது. அர்ஜுனனின் வில் காண்டீபம், ராமனின் கரத்தில் இருக்கும் வில் கோதண்டம் என்பது நமக்குத் தெரியும். பரமேஸ்வரனின் கையிலுள்ள வில்லுக்கு என்ன பெயர் தெரியுமா? பிநாகம்! நாரதர் கையில் உள்ள - வீணையின் பெயர் -மகதி. பக்த பிரகலாதனின் மகன் விரோசனன். இந்த விரோசனன் மைந்தனே மகாபலி. இவர், முற்பிறவியில் எலியாகத் திகழ்ந்து, சிவன்கோயிலில் தீபத்தைத் தூண்டிவிட்ட புண்ணியத்தால் மறுபிறவியில் மன்னனாகப் பிறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !