அர்ச்சனை செய்யும்போது..
ADDED :2775 days ago
அனுதினமும் இறை நாமங்களை மனதுக்குள் உச்சரித்து, பூக்களால் ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்து பூஜிப்பது, அற்புதமான பலன்களைத் தரும் எளிய வழிபாடு ஆகும். அவ்வாறு பூக்களால் அர்ச்சிக்கும்போது அவற்றின் இதழ்கள் மேற்புறமாகவும், காம்பு பாகம் கீழ்நோக்கி இருக்கும்படியும் சமர்ப்பித்து அர்ச்சனை செய்ய வேண்டும். அதேபோல் அன்றலர்ந்த மலர்களையே அர்ச்சனைக்கும் பூஜைக்கும் பயன்படுத்தவேண்டும். வில்வம், துளசி, தாமரை ஆகியவற்றுக்கு நிர்மால்யம் கிடையாது. மீண்டும் பயன்படுத்தலாம்.