உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா

தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா

தேனி: தேனி பங்களாமேடு  மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்  சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. நேற்று மாலை 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்களும், தட்சிணாமூர்த்தி பூஜையும், இரவு அன்னவாகன  நகர்வலமும் நடந்தது.இன்று திருவிளக்கு பூஜை, காளை வாகன நகர்வலம் நடக்கிறது. முக்கிய நிகழ்வாக ஏப்.,27 ல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !