உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / போடி அருகே கி.பி.,16,17ம் நுாற்றாண்டின் வீரக்கல் கண்டுபிடிப்பு

போடி அருகே கி.பி.,16,17ம் நுாற்றாண்டின் வீரக்கல் கண்டுபிடிப்பு

போடி: தேனி மாவட்டம் புலிகுத்தி கிராமத்தில்  16, 17 ம் நுற்றாண்டின் வீரக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போடி சி.பி.ஏ., கல்லுாரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் மாணிக்கராஜ் கூறியது: கல்லுாரி முதல்வர் மனோகரன் வழிகாட்டுதலில் தொல்லியியல் ஆய்வாளர் பேராசிரியர் கனகராஜ், மாணவர்கள் ராம்குமார், சவுந்திரபாண்டி, பிரகாஷ், ராஜேஷ், இந்த கிராமத்தில் ஆய்வு செய்தோம். ஊர் பெயர் வருவதற்கு காரணமாக இருந்த மூன்றடி வீரக்கல் பள்ளி அருகே பாழடைந்த கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்டது. மூன்று பக்கம் ஆண், பெண் உருவங்களும், ஒரு பக்கம் பசு மற்றும் நந்தி உருவமும் சிற்பமாக உள்ளன.  சிவலிங்கத்தின் மீது பசு பால் சுரக்கும் சிற்பம், வீரக்கல், நடுகல், சதிக்கல் உள்ளன, என்றார். ஊர்மக்கள் கூறும் போது, கால்நடைகளை காக்க, சகோதரர்கள் இருவர் புலியுடன் நடந்த சண்டையில் அதை கத்தியால் குத்தி கொன்று வீரமரணமடைந்தனர். இதன் நினைவாக புலிகுத்தி என அழைக்கப்படுகிறது,  என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !