சிவகாம சுந்தரேஸ்வர் திருவீதியுலா!
ADDED :5056 days ago
திருத்தணி : ஆருத்ரா தரிசன விழா முன்னிட்டு, சுந்தர வினாயகர் கோவிலில் சுந்தரேஸ்வர சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் திருவீதியுலா நடந்தது. திருத்தணி ம.பொ.சி.சாலையில் உள்ள சுந்தர வினாயகர் கோவிலில், ஆண்டுதோறும் ஆருத்ரா விழாவையொட்டி சிவகாம சுந்தரேஸ்வர் சுவாமிக்கு, பால், பன்னீர் மற்றும் அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அலங்காரம் மற்றும் தீபாராதனையும் நடந்தது. காலை 11 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் சிவகாம சுந்தரேஸ்வரர் சுவாமி எழுந்தருளினார். அங்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டு, நகராட்சியில் உள்ள அனைத்து வீதிகளிலும் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் தனபால், குருக்கள் துரைராஜ் மற்றும் பலர் செய்திருந்தனர்.