அமைதி வேண்டி பாத யாத்திரை
ADDED :2768 days ago
மேலுார், உலக அமைதிக்காக டில்லியில் இருந்து பாத யாத்திரை மேற்கொண்டுள்ள ஜெயின் சமூகத்தினர் நேற்று மேலுார் வந்தனர். கர்நாடகா கமலா ஸ்ரீ மாதாஜி, ராஜஸ்தான் சுருதிகா ஸ்ரீ மாதாஜி தலைமையில் ஆறு பேர் இதில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் டில்லியில்யாத்திரையை துவங்கினர். ஒரு நாளைக்கு ஒருவேளை உணவு மட்டும் எடுத்து கொள்கின்றனர். ஒவ்வொரு மாவட்டங்களிலும் முக்கிய கோயில்களில் வழிபாடு நடத்துவதாகவும், தமிழக சுற்றுபயணத்தை முடித்து மைசூரு கனகிரி ஜெயின் கோயிலில் யாத்திரை முடிக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.