நாகராஜா கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :2768 days ago
காரைக்குடி: காரைக்குடி வாட்டர் டேங்க் நாகாத்தம்மன் கோயில் சித்திரை விழாவை முன்னிட்டு நாகராஜருக்கும், நாகராணிக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. பெண்கள் தங்கள் தாலி பாக்கியம் நிலைக்க மஞ்சள் கயிறாலான தாலி எடுத்து நாகாத்தம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். குழந்தை வரம் வேண்டியவர்கள் மிட்டாய் வாங்கி வைத்தனர். இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை டிரஸ்டிகள் கொப்புடையாள் பழனியப்பன், ராமசாமி, பொறியாளர்கள் பழனியப்பன், அருணாச்சலம், ஆடிட்டர் வேலாயுதம் செய்திருந்தனர்.