உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

அருப்புக்கோட்டை, அருப்புக்கோட்டை, புளியம்பட்டி-திருநகரம் ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கடந்த வாரம்கொடியேற்றத்துடன் துவங்கியது. 12 நாட்கள் நடக்கும் விழாவில் எட்டாம் நாள் விழாவாக, திருப்பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. ஒன்பதாம் நாள் விழாவாக, பக்தர்கள் விரதம் இருந்து அக்னி சட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் இறங்கினர். பத்தாம் நாள் விழாவாக தேரோட்டம் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பவனி வந்தார். ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் உறவின்முறை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !