திரவுபதி அம்மன் கோவிலில் வசந்த விழா துவக்கம்
ADDED :2768 days ago
செங்கல்பட்டு : செங்கல்பட்டில், திரவுபதி அம்மன் கோவிலில், மஹா பாரத தீமிதி வசந்த விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. செங்கல்பட்டு மேட்டுத் தெருவில், திரவுபதி அம்மன் கோவில், ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும், மஹாபாரத தீமிதி வசந்த விழா நடைபெறும். இந்த ஆண்டு, மஹாபாரத தீமிதி வசந்த விழா, நேற்று காலை, காவல் தெய்வமான உற்சவர் போத்தராஜா சுவாமிக்கு சிறப்பு அபிஷேகத்துடன், கொடியேற்று விழா, துவங்கி, 11ம் தேதி வரை நடைபெறுகிறது.தினமும், பகல், 2:00 மணிக்கு, மஹாபாரத தொடர் சொற்பொழிவு துவங்கி, மாலை, 5:30 மணிக்கு, நிறைவடையும். தினமும் மாலையில், அம்மன் வீதியுலா நடைபெறும்.