உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கன்னியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே, சாலரப்பட்டி கன்னியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை தொடங்குகிறது.சாலரப்பட்டி கன்னியம்மன்கோவில் கும்பாபிஷேகம் வரும் 25ம்தேதி நடக்கிறது. இதற்கான நிகழ்ச்சிகள் நாளை காலை 6:00 மணிக்கு மங்கள இசையுடன்தொடங்குகிறது. காலை, 9:00 மணிக்கு திருமூர்த்தி மலைக்கு தீர்த்தம் எடுக்கச்செல்லுதல், மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதலும், 23ம்தேதி காலை, 9:00 மணிக்கு யாகசாலை அலங்காரம், 108 சுவாமிகள் பிரதிஷ்டை, மாலை 5:00 மணிக்கு முதல்காலயாக பூஜை, காயத்ரி ேஹாமமும் இடம்பெறுகின்றன.வரும் 24ம் தேதி காலை, 8:00 மணிக்கு மங்கள இசை, இரண்டாம் காலயாக பூஜையும், காலை, 10:30 மணிக்கு கோபுரகலசங்கள் பிரதிஷ்டை செய்தலும், மாலை 5:00 மணிக்கு மூன்றாம்கால யாக பூஜையும் நடக்கின்றன. ஏப்., 25ம்தேதி காலை 5:00 முதல் 6:00 மணிக்குள் கன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !