உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

தலைவாசல்: மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் கோலாகலமாக நடந்தது. சித்திரை திருவிழாவையொட்டி, தலைவாசல், பட்டுத்துறை, புதுப்பட்டி மாரியம்மன் கோவிலில், நேற்று காலை, சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள், பால்குடம் எடுத்து, ஊரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து, கோவிலை அடைந்தனர். இதையடுத்து, அம்மனுக்கு பால் அபி?ஷகம் நடந்தது. மாலை, வீதியுலா வந்தார். இதில், பட்டுத்துறை, தலைவாசல் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்தவர்கள், சுவாமியை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !