சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் கோலாகலம்
ADDED :2768 days ago
பெத்தநாயக்கன்பாளையம்: ஏத்தாப்பூர், வசிஷ்ட நதிக்கரையிலுள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில், சித்திரை திருவிழாவையொட்டி, ஊஞ்சல் உற்சவம், நேற்று நடந்தது. காலை 10:30 மணிக்கு, குடும்பம் செழிக்க, மாங்கல்யம் நிலைக்க வேண்டி, 100க்கும் மேற்பட்ட பெண்கள், அம்மனுக்கு, குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர். தொடர்ந்து, உற்சவர் மாரியம்மனுக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஊஞ்சல் உற்சவம் கோலாகலமாக நடந்தது. இதில், திரளான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர்.