மகா கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம்
சேலம்: சேலம், சீலநாயக்கன்பட்டி, சிவசக்தி நகர், செல்வ விநாயகர், சிவசக்தி மாரியம்மன் கோவில், மகா கும்பாபி?ஷம், நாளை நடக்கிறது. அதையொட்டி, நேற்று, தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. தாதகாப்பட்டி கேட், காளியம்மன் கோவிலிலிருந்து, காலை, 11:00 மணிக்கு, ஏராளமான பக்தர்கள், தீர்த்தக்குடம் எடுத்து, ஊர்வலம் புறப்பட்டனர். அலங்கரிக்கப்பட்ட குதிரைகள், காளை அணிவகுக்க, முக்கிய வீதிகளில் சென்று, கோவிலை அடைந்தனர். தொடர்ந்து, விநாயகர், சிவசக்தி மாரியம்மனுக்கு, சிறப்பு பூஜை செய்து, வழிபட்டனர். இரவு, 7:00 மணிக்கு மேல், முதல்கால பூஜை நடந்தது. இன்று காலை, 8:30 மணிக்கு, இரண்டாம் கால யாகபூஜை நடக்கிறது. நாளை காலை, 7:30 மணிக்கு மேல் மகா கும்பாபி?ஷகம், 10:00 மணிக்கு மேல், திருக்கல்யாணம் நடக்கவுள்ளது.
* இடைப்பாடி அருகே, கல்லபாளையம், அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம், நாளை நடக்கவுள்ளது. அதையொட்டி, கல்வடங்கம் காவிரி ஆற்றிலிருந்து, 300க்கும் மேற்பட்டோர், தீர்த்தக்குடங்களை எடுத்து, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்து, கோவிலை அடைந்தனர்.