மாரியம்மன் கோவில் விழா: ஷவர் அமைத்து நீராடல்
ADDED :2768 days ago
ப.வேலூர்: பொத்தனூரில், சுயம்பு வெள்ளக்கல் மாரியம்மன் திருவிழாவிற்காக, காவிரியாற்றில் செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டது. ப.வேலூர் அடுத்த, பொத்தனூரில் சுயம்பு வெள்ளக்கல் மாரியம்மன் திருவிழா நடந்து வருகிறது. இந்நிலையில், காவிரியாற்றில் தண்ணீர் இல்லாததால் ஆற்றுக்குள் போர்வெல் அமைத்து செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது. அம்மனுக்கு தீர்த்தம் எடுக்க வரும் பக்தர்கள், அதில் நீராடி, தீர்த்தம் எடுப்பதற்காக அங்கு அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் தண்ணீர் பிடித்துச் செல்கின்றனர். இந்நிலையில், ஆண்கள் மற்றும் பெண்கள் ஒரே பகுதியில் நீராடுகின்றனர். அப்பகுதியில், உடை மாற்றும் இடம் அமைக்க, பெண்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.