உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கர ஜெயந்தியை முன்னிட்டு பூணூல் போடும் விழா

சங்கர ஜெயந்தியை முன்னிட்டு பூணூல் போடும் விழா

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், சங்கர ஜெயந்தியை முன்னிட்டு, பூணூல் போடும் விழா நடந்தது. கிருஷ்ணகிரி புதுப்பேட்டை சங்கர மடத்தில், பிராமணர் நலச்சங்கம் சார்பில், ஜகத்குரு ஆதிசங்கர பகவத் பாதாளின் சங்கர ஜெயந்தி விழா நேற்று நடந்தது. பிராமணர் நலச்சங்கத் தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். பத்து குழந்தைகளுக்கு, உபநயனம் செய்யப்பட்டு, பூணூல் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, பாலாஜிசர்மா சொற்பொழிவு ஆற்றினார். உபநயனவர்கள், ஆதிசங்கரர் திருவுருவ படத்துடன், கிருஷ்ணன் கோவில் மாடத் தெருவில் ஊர்வலமாக சென்றனர். விழாவில், கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த, ஏராளமான பிராமணர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, கிருஷ்ணகிரி பிராமணர் நலச்சங்கத்தின் செயலர் குருபிரசாத், துணைத் தலைவர் குமார், இணைச் செயலர் வாசுதேவன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !