உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாசநாதருக்கு கும்பாபிஷேகம்: விண்ணை முட்டியது சிவ கோஷம்

கைலாசநாதருக்கு கும்பாபிஷேகம்: விண்ணை முட்டியது சிவ கோஷம்

சேலம்: கைலாசநாதருக்கு நடந்த கும்பாபிஷேகத்தில், பக்தர்களின் சிவ கோஷம் விண்ணை முட்டியது. சேலம் மாவட்டம், தாரமங்கலம், கைலாசநாதர் கோவில், மஹா கும்பாபி ?ஷகத்தை முன்னிட்டு, கடந்த, 17 இரவு, 8:00 மணிக்கு மஹா கணபதி பூஜை, கிராம சாந்தியுடன் விழா துவங்கியது. 20 காலை, 7:30 மணிக்கு மேள வாத்தியம் முழங்க, கலசங்கள் நகர் வலம் எடுத்து வந்து, கோபுரத்தில் சாத்துப்படி செய்தனர். நேற்று காலை, 5:30 மணிக்கு நான்காவது கால பரிவார யாகசாலை பூஜை முடிந்து, 6:00 மணிக்கு மேல், பரிவார மூர்த்திகளுக்கு, சிவாச்சாரியார்கள், கும்பாபி ?ஷகம் நடத்தி வைத்தனர். தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க, யாகசாலையிலிருந்து, புனிதநீரை தலையில் சுமந்து, பிரகாரத்தில் வலம் வந்த சிவாச்சாரியார்கள், காலை, 9:34 மணிக்கு, ராஜகோபுர கலசம் மீது, புனிதநீரை ஊற்றி, கும்பாபி ?ஷகம் செய்தனர். அதேநேரம், வானத்தில் மும்முறை வட்டமிட்டு, ?ஹலிகாப்டரிலிருந்து பூக்கள் தூவ, திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மெய்சிலிர்க்க, சிவ சிவ, நமச்சிவாய வாழ்க கோஷம் முழங்க, கோலாகலமாக கும்பாபி ?ஷகம் நடந்தது. பின், மூலவர் சிவகாம சுந்தரி உடனுறை கைலாசநாதருக்கு, தீபாராதனை செய்து, பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ., ராஜா, கலெக்டர் ரோகிணி உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !