திருவள்ளுர் வீரராகவர் கோவிலில் கருட சேவை உற்சவம்
ADDED :2766 days ago
திருவள்ளுர்: திருவள்ளுர் வீரராகவர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கருடசேவை நடந்தது. கருடன் வாகனத்தில் வீரராகவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருபலித்தார்.
நுாற்றி எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான, திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவில் தினமும் காலை, மாலை இரு வேளையிலும், வாகனங்களில் உற்சவர் வலம் வருவார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை இன்று நடந்தது. அதிகாலை, கோபுர தரிசனமும், தொடர்ந்து வீதி புறப்பாடும் நடந்தது. காலை கருடன் வாகனத்தில் வீரராகவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.