அலங்கார நுழைவாயில் கும்பாபிஷேகம்
ADDED :2765 days ago
தலைவாசல்: கோவில் அலங்கார நுழைவாயில் கும்பாபி?ஷகம் கோலாகலமாக நடந்தது. தலைவாசல், சித்தேரி, மாப்பிள்ளை நகரிலுள்ள மாரியம்மன் கோவிலில், நேற்று காலை, அம்மன், விநாயகர், முருகன் நவக்கிரஹங்களுக்கு, கும்பாபி?ஷகம் நடந்தது. அதேபோல், வேப்பம்பூண்டி, சிற்றாறு நதிக்கரை, சடையப்பர் கோவிலில், சடையப்பர், கன்னிமார் சுவாமிகளுக்கு கண் திறப்பு செய்து, கும்பாபி?ஷகம் வெகு விமரிசையாக நடந்தது. ஆறகளூர், காமநாதீஸ்வரர் கோவில் பின்புறம், அம்பாயிரம்மன் கோவில் உள்ளது. அதற்கு, அங்குள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே, அலங்கார நுழைவாயில் கட்டப்பட்டுள்ளது. அதற்கு, சிறப்பு ?ஹாமம் செய்து, சிவாச்சாரியார்கள், வேதமந்திரங்கள் முழங்க, கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி, கும்பாபி?ஷகம் நடத்தி வைத்தனர். திரளான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர்.