நசியனூர் அருகே கும்பாபிஷேக விழா
ADDED :2765 days ago
பெருந்துறை: நசியனூர் அருகே, கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.பெருந்துறை அடுத்த, நசியனூர் அருகே, ஆலுச்சாம்பாளையம் புதூர் கிராமத்தில், ஸ்ரீ சக்தி விநாயகர், மாதேஸ்வரர், கருப்பண்ணசுவாமி, கன்னிமார் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று காலை நடந்தது. முன்னதாக, யாகசாலையில், வேள்வி பூஜைகள் நடந்தன. சந்திரசேகர் தீட்சிதர் தலைமை வகித்தார். நாகராஜ், பாலசுப்பிரமணியம் சிவாச்சாரியார்கள், கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதன்பின், மகா தரிசனம், கோபூஜை நடந்தது. விழாவில், திரளான மக்கள் கலந்து கொண்டனர்.