மல்லாண்டவர் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :2765 days ago
கிருஷ்ணராயபுரம்: மாயனூர் காசா நகரில் உள்ள மல்லாண்டவர் கோவில் கும்பாபிஷேகம் விழா நேற்று நடந்தது. முன்னதாக, காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து, ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். நேற்று முன்தினம் மாலை, விநாயகர் பூஜை மற்றும் முதல் கால பூஜை நடந்தது. நேற்று காலை, இரண்டாம் கால பூஜை செய்து, காலை, 8:00 மணியளவில் கோவில் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. விழாவில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.