இவர்களுக்குள் ஒற்றுமை பாருங்க!
ADDED :2769 days ago
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலும், அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயிலும் பலவிஷயங்களில் ஒற்றுமை கொண்டதாக திகழ்கிறது. இருகோயில்களும் கோட்டை கொத்தளங்கள் கொண்டவை. நெல் உள்ளிட்ட விளைபொருட்களை காணிக்கையாக செலுத்தும் குதிர்கள் இரண்டு இடங்களிலும் உண்டு. பிரதான வாசலுக்கு ‘ஆர்யன்வாசல்’ என்று பெயர். மூலவருக்கு படைக்கும் பிரசாதம் தனி நெய்யினால் தயாரிக்கப்படுகின்றன. இரண்டு கோயில்களிலும் திருமதில்களைப் பற்றி பாசுரம் நாலாயிரதிவ்ய பிரபந்தத்தில் உள்ளன. பெரியாழ்வாரும் ஆண்டாளும் இருகோயில் பெருமாளிடமும் மிகுந்த பக்தி கொண்டு வாழ்ந்தவர்கள். ஆண்டாள் சூடிய மாலையை ரங்கநாதர், அழகர்கோவில் வந்து ஏற்றுக் கொண்டதாக ஐதீகம்.