இணைந்தது இருவிழா!
ADDED :2769 days ago
மதுரை மீனாட்சியம்மன் கோயில் பெரிய திருவிழா, மாசி மாதம் தான் நடந்து வந்தது. இதை உறுதிப்படுத்தும் விதத்தில் இன்றும் சுவாமி பவனி வரும் வீதி மாசிவீதியாகவே உள்ளது. அழகர்கோவிலில் சுந்தரராஜப்பெருமாளுக்கோ சித்திரையில் விழா நடந்தது. திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்புவரை இவ்விழாக்கள் தனித்தனியாகவே நடந்து வந்தன. சமயப்பூசலை ஒழித்து மக்கள் ஒற்றுமையோடு வாழவேண்டும் என்ற உயர்ந்தநோக்கில் மீனாட்சியம்மன் திருக்கல்யாண வைபவத்தை சித்திரைக்கு மாற்றினார் நாயக்கர். அதுமுதல் மீனாட்சிக்கும், அழகருக்கும் சித்திரை மாதத்தில் திருவிழா நடந்து வருகிறது.