பாதாளகாளியம்மன் கோயிலில் சிலை எடுப்பு திருவிழா
ADDED :2832 days ago
கடலாடி, கடலாடி பாதாளகாளியம்மன் கோயிலில் சிலை எடுப்பு திருவிழா ஏப்.17ல் காப்புகட்டுதலுடன் துவங்கியது. பாதாளகாளி உள்ளிட்ட 11 பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பூதங்குடியில் இருந்து சோனை கருப்பச்சாமி, ராக்காச் சியம்மன், வீரபத்திரன், பைரவர், தவழும் பிள்ளை, குதிரை, உடல் உறுப்புகள் உள்ளிட்ட சிலைகளை தலையில் சுமந்து ஊர்வலமாக வந்தனர். ஏராளமானோர் பங்கேற்றனர்.