சில்வார்பட்டி பகவதி அம்மன் கோயில் திருவிழா
ADDED :2833 days ago
தேவதானப்பட்டி, தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி பகவதி அம்மன் கோயில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. முதல் நாள் வேளார் வீட்டில் இருந்து பெரியவீட்டுத்தெரு, கடைவீதி வழியாக அம்மன் அழைத்து வரப்பட்டு கோயிலுக்கு சென்றது. அதிகாலையில் பெணகள் மாவிளக்கு எடுத்தனர். பொங்கல் வைத்து கிடா வெட்டினர். அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். போக்குவரத்து பாதிப்பு: நேற்று மாலை இங்கு பலத்த காற்றுடன் மழை பெய்ததில் மூங்கில் கம்பு கட்டப்பட்டு அமைக்கப்பட்ட அம்மன் அலங்கார விளக்கு ரோட்டின் குறுக்கே சரிந்தது. இதனால் தேவதானப்பட்டி-ஜெயமங்கலம் இடையே அரைமணி நேரம் போக்குவரத்து பாதித்தது.