ஆண்டாளை தரிசிக்க குவியும் வி.ஜ.பி.,க்கள்
ADDED :2763 days ago
ஸ்ரீவில்லிபுத்துார், கோடைவிடுமுறை துவங்கி உள்ளநிலையில், பல்வேறு அரசியல் மற்றும் அரசுத்துறை வி.ஐ.பி.,க்கள், குடும்பத்தினருடன் ஆண்டாளை தரிசிக்க ஸ்ரீவில்லிபுத்துார் வருகின்றனர். இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசின் பல்வேறு உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள், நீதிபதிகள் என பலரும் இதில் அடக்கம். கோடைவிடுமுறை துவங்கி உள்ளதால், பல்வேறு அரசுத்துறை உயரதிகாரிகள் குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்வது அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஸ் லக்கானி ஆண்டாளை தரிசித்தனர். நேற்று காலை, முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா, போலீஸ் ஜ.ஜி.,க்கள் மனோகரன், துரைக்குமார் குடும்பத்துடன் ஆண்டாளை தரிசித்தனர்.