சீர்காழி பிரமபுரீஸ்வரர் கோயிலில் சித்திரை தேரோட்டம்: பக்தர்கள் குவிந்தனர்
மயிலாடுதுறை: சீர்காழி பிரமபுரீஸ்வரர் கோயிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் சீர்காழியில் தேவார பாடல் பெற்ற ஸ்ரீ திருநிலைநாயகி உடைனாகிய பிரமபுரீஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சுவாமி, அம்பாள் மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இந்த கோயிலின் சித்திரை பிரமோற்சவம் கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 15 நாட்கள் நடைபெறும் உற்சவத்தின் முக்கிய திருவிழாவான 8ம் நாள் திருத்தேரோட்ட திருவிழா இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் வினாய கர், ஞானசம்பந்தர், சுவாமி, அம்பாள் எழுந்தருள தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து திரளான பக்தர்கள் நமச்சிவாயா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து, சுவாமி யை வழிபட்டனர். இசை வாத்தியங்கள் முழங்க, பக்தர்கள் நீர்தெளித்து, கோலமிட்ட நான்கு மாட வீதிகளையும் தேர் வலம் வந்தது. வழி எங்கும் பக்தர்கள் சுவாமிக்கு அர்ச்ச னைகள் செய்து வழிபட்டனர்.