உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகையாற்றில் இறங்க.. ஏப்.,28 மாலை புறப்படுகிறார் கள்ளழகர்

வைகையாற்றில் இறங்க.. ஏப்.,28 மாலை புறப்படுகிறார் கள்ளழகர்

மதுரை, மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி ஏப்.,30ல் நடக்கிறது. இதைமுன்னிட்டு, ஏப்.,28 மாலை அழகர்கோவிலில் இருந்து சுவாமி புறப்படுகிறார். இதன்காரணமாக ஏப்., 28,29ல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நத்தத்தில் இருந்து அழகர்கோவில் வழியாக மேலுார் செல்லும் வாகனங்கள் ஊமச்சிக்குளம், மதுரை, ஒத்தக்கடை, நான்குவழிச்சாலையாக செல்ல வேண்டும். மேலுாரில் இருந்து அழகர்கோவிலுக்கு செல்ல இதே வழியை பயன்படுத்த வேண்டும். மேலுாரில் இருந்து அழகர்கோவில் வழியாக மதுரை செல்லும் வாகனங்கள், மேலுார் - ஒத்தக்கடை நான்குவழிச்சாலை வழியாக மதுரை செல்ல வேண்டும். மதுரையில் இருந்து அழகர்கோவில் வழியாக மேலுார் செல்லும் வாகனங்கள் இதே வழியை பயன்படுத்த வேண்டும். ஏப்.,28ல் மதுரை - அழகர்கோவில் அரசு பஸ்கள் அப்பன்திருப்பதி வழியாக சி.ஆர். பொறியியல் கல்லுாரி அருகில் தற்காலிக பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்படும். மேலுார் - அழகர்கோவில் பஸ்கள், கிடாரிப்பட்டி வழியாக மகாத்மா பள்ளி மைதானம் அருகில் உள்ள தற்காலிக பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்படும் என மாவட்ட எஸ்.பி., மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !