உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்

குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்

குன்றத்துார் : குன்றத்துார், திருநாகேஸ்வரர் கோவில் தேரோட்டம், நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, வடம் பிடித்து, தேர் இழுத்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துாரில், பழமை வாய்ந்த, காமாட்சி அம்மன் உடனுறை திருநாகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. நவ கிரக ராகுத்தலமாக கருதப்படும், இந்த கோவிலுக்கு, தினமும் ஏராளமானோர் சென்று வழிபடுகின்றனர். இக்கோவிலில் பிரம்மோற்சவ விழா, 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைத் தொடர்ந்து, தினமும் பல்வேறு வாகனத்தில், சுவாமி திருவீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின், ஏழாவது நாளான நேற்று, மகா ரத உற்சவம் எனும், தேர் திருவிழா நடைபெற்றது. காலை, 6:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகத்துடன் உற்சவர், தேரில் புறப்பட்டார். விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, வடம் பிடித்து, தேர் இழுந்தனர். நிலையத்தில் இருந்து புறப்பட்ட தேர், நான்கு சாலைகள் வழியாக, பவனி சென்று, மதியம், 2:00 மணி அளவில், நிலையத்தை சென்றடைந்தது. தேர் சென்ற வழிநெடுகிலும், ஆங்காங்கே மோர், குளிர்பானம், அன்னதானம் வழங்கப்பட்டது.தேரோட்டத்தை முன்னிட்டு, பக்தர்கள் வசதிக்காக, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள், விழாவில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !