உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா: தீ மிதித்த பக்தர்கள்

காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா: தீ மிதித்த பக்தர்கள்

சேலம்: காளியம்மன் கோவில் திருவிழாவில், திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சேலம், நெத்திமேடு, மணியனூர் மகா காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா, கடந்த, 17ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று மாலை, தீ மிதி விழா நடந்தது. அதையொட்டி, கே.பி.கரட்டிலிருந்து, அம்மனை ஊர்வலம் அழைத்து வந்து, பூசாரி குண்டம் இறங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று இரவு, சத்தாபரணமும், நாளை மஞ்சள் நீராடுதல், மே, 1 விடையாற்றி உற்சவம் ஆகியன நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை மணியனூர் ஊர் பொதுமக்கள், விழாக்குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !