உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வத்திராயிருப்பு தர்மசாஸ்தா கோயிலில் வருஷாபிஷேக விழா

வத்திராயிருப்பு தர்மசாஸ்தா கோயிலில் வருஷாபிஷேக விழா

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே பிளவக்கல் அணையை ஒட்டிய மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள துாங்காலக்கிழவனார் , தர்மசாஸ்தா கோயிலில் வருஷாபிஷேக விழா  நடந்தது. காலையில் பூரணகும்பம் வைத்து ஜெப பூஜைகள் நடத்தப்பட்டது.  சுவாமிக்கு 18 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது.  பூஜையின் முடிவில் பூஜிக்கப்பட்ட கும்பநீரால் சுவாமி , கருப்பசாமி, வனப்பேச்சி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு  அபிஷேகம் நடந்தது.  சுவாமிக்கு பக்தர்கள் வெள்ளிக்கவசம் அணிவித்தனர். சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமிக்கு அன்னப்படையல்   பூஜைகளும்,   அன்னதானமும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !