ஞானானந்தா தபோவனத்தில் சித்ரா பவுர்ணமி விழா
ADDED :2760 days ago
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் ஸ்ரீ ஞானானந்தா தபோவனத்தில், நாளை சித்ரா பவுர்ணமி விழா நடக்கிறது. திருக்கோவிலுார் ஸ்ரீ ஞானானந்தா தபோவனத்தில், சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி, நாளை அதிகாலை 5:00 மணிக்கு‚ அதிஷ்டானத்தில் மகன்யாச ஏகாதச ருத்ரஜபம்‚ மூர்த்திகள் அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து காலை 6:00 மணிக்கு‚ கணபதி ேஹாமம்‚ பாதபூஜை‚ 8:00 மணிக்கு அதிஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு‚ மணிமண்டபத்தில் சிறப்பு அபிேஷகம்‚ அலங்காரம்‚ மகாதீபாராதனை‚ அதிஷ்டான பூஜைகள் நடக்கிறது. முன்னதாக, இன்று இரவு 7:00 மணிக்கு‚ ஸ்ரீவினய் சந்திரமேனன் குழுவினரின் நாமசங்கீர்த்தனம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தபோவனம் நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி மற்றும் அறக்கட்டளை நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.