உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / போடி ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம்

போடி ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம்

போடி, போடியில் ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அதையொட்டி விக்னேஷ்வர பூஜை, யாகவேள்வி பூஜை, ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. ஐயப்ப பக்தசபை தலைவர் முனியாண்டி தலைமை வகித்தார். செயலாளர் விவேகானந்தன், பொருளாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். சுவாமி அலங்காரத்தினை குருக்கள் கமலக்கண்ண்ன் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. * போடி அருகே தீர்த்ததொட்டி ஆறுமுகநாயனார் கோயிலில் கும்பாபிஷேகம் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தக்கார் பாலகிருஷ்ணன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !