என்.கோவில்பட்டி பகவதியம்மன் விழா
ADDED :2761 days ago
நத்தம், நத்தம் கோவில்பட்டி மேலத்தெரு பகவதியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா நடந்தது. இத்திருவிழா கடந்த ஏப்.16 அன்று காப்பு கட்டுதலுடன் துவங்கியது. ஏப்.23 அன்று இரவு காக்கா குளத்தில் இருந்து குறவன்-குறத்தி ஆட்டம், நையாண்டி மேளம், வாண வேடிக்கை முழங்க அம்மன் நகர்வலமாக சென்று கோயிலை அடைந்தார். மறுநாள் அக்னிச்சட்டி, சந்தனக்குடம் மற்றும் மாவிளக்கு எடுக்கப்பட்டது. ஏப்.25 ல் அம்மனுக்கு பொங்கல் வைத்து, கிடா வெட்டி சிறப்பு பூஜை நடந்தது. நேற்று அம்மன் மலையேற்றத்துடன் விழா நிறைவடைந்தது.