பகவதியம்மன் கோயில் திருவிழா
ADDED :2761 days ago
கூடலுார்: லோயர்கேம்பில் பகவதியம்மன் கோயில் திருவிழா 3 நாட்கள் நடந்தது. கொடியேற்றத்துடன் துவங்கிய இவ்விழாவில், அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. ஊர்மக்கள் கூடி, பொது பூஜை நடத்தி, பொது பொங்கல் வைத்தனர். அதிகாலையில் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். தொடர்ந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். கரகாட்டம், கலைநிகழ்ச்சி, சொற்பொழிவு நடைபெற்றன.மாலையில் 500க்கும் மேற்பட்டோர் முளைப்பாரி எடுத்து குறுவனத்து பகவதியம்மன் கோயில் வரை ஊர்வலமாக சென்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை லோயர்கேம்ப் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.