வீரஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்
ஓசூர்: கெலமங்கலம் அடுத்த, ரத்தினகிரி வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபி ?ஷக விழாவில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, கெலமங்கலம் அடுத்த பொம்மதாதனூர் அருகே உள்ள ரத்தினகிரி மலை அடிவாரத்தில், வீர ஆஞ்சநேய சுவாமி கோவில் உள்ளது. பழமையான இக்கோவில் சிதிலமடைந்த நிலையில் இருந்ததால், பல லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைப்பு செய்யப்பட்டு, கோவில் அருகே கோசாலை அமைக்கப்பட்டது. கோவில் கும்பாபி ?ஷக விழா நேற்று முன்தினம் துவங்கியது. அன்று மாலை, 5:30 மணிக்கு, கங்கை பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. முக்கிய நிகழ்ச்சியான நேற்று காலை, பிரதான கலச பூஜை, பரிவார கலச பூஜை, 7:30 மணிக்கு கணபதி ஹோமம், ராமதாரக ஹோமம், ஆஞ்சநேய சுவாமி மூலமந்திர ஹோமம் நடந்தது. 9:20 மணிக்கு கும்பாபி?ஷகம், சுவாமிக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.