உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் சித்திரகுப்தர் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா கோலாகலம்

காஞ்சிபுரம் சித்திரகுப்தர் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா கோலாகலம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சித்திர குப்தர் கோவிலில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. அதிகாலையில் இருந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள சித்திரகுப்தர் கோவிலில் ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமி அன்று சிறப்பு வழிபாடு நடைபெறும். அதற்கான வசதியை கோவில் நிர்வாகம் நேற்று செய்திருந்தது. வெளி மாவட்டங்களில் இருந்தும் சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக நேற்று நீண்ட நேரம் காத்திருந்து வழிபட்டனர். பக்தர்கள் தரிசனத்திற்கு செல்வதற்காக இரு வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டம் இரவு வரை நீடித்திருந்தது. அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் அனைத்து வாகனங்களும் தடை செய்யப்பட்டன.பேருந்து நிலையம் உள்ளே செல்லும் பேருந்துகள் நுழைவு வாயில் வழியாக நேற்று அனுமதிக்கப்பட்டன.இதே போல் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. சிறப்பு அனுமதி யாருக்கும் வழங்கப்படவில்லை.  அனைவரும் பொது தரிசன வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். அதுபோல் மற்ற கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !