புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் பூக்குழி
ராஜபாளையம்;ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன்கோயிலில் ஆறுஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று பூக்குழி இறங்கினர்.மாரியம்மன்கோயில் விழா ஏப். 20 ல் கொடியேற்றத்துடன் துவங்கி,விேஷச பூஜை மற்றும் அலங்காரத்தில் அம்மன் தினமும் பொட்டி பல்லக்கு, கண்ணாடிசப்பரம், தண்டியல், பூ சப்பரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று நடந்த பூக்குழியில் ஆறுஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நகரின் முக்கிய வீதி வழியாக வந்து பூக்குழி இறங்கினர். ராஜபாளையம் சுற்று வட்டார பகுதிபக்தர்கள் கலந்துகொண்டனர். நெரிசலைதவிர்க்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. ராஜபாளையம் டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார், ஊர்க்காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று காலை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. விழாஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் குழுத்தலைவர் ரவி தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.