உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்ரா பவுர்ணமி வழிபாடு: அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம்

சித்ரா பவுர்ணமி வழிபாடு: அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், சித்ரா பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. பொள்ளாச்சி கோட்டூர் ரோடு விண்ணளந்த காமாட்சி அம்மன் உடனமர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், சித்ரா பவுர்ணமி விழா கடந்த, 21ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு கணபதி ேஹாமம், தீபாராதனை நடந்தது. ஏகாம்பரேஸ்வரருக்கும், விண்ணளந்த காமாட்சி அம்மனுக்கும் நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மாலையில் திருவிளக்கு பூஜைகள் நடந்தன. பொள்ளாச்சி பாலமாணிக்கம் தெருவிலுள்ள, காமாட்சியம்மன் கோவிலில் கடந்த, 27ம் தேதி சித்ரா பவுர்ணமி திருவிழா துவங்கியது. நேற்றுமுன்தினம் மாவிளக்கு, சந்தனகாப்பு, சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. நேற்று காலை முத்தங்கி அலங்காரம்; காமாட்சி அம்மன், ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பக்தர்களுக்கு மஞ்சள் சரடு, குங்குமம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில், அம்மன் திருவீதி உலா மற்றும் அம்மன் ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. இன்று காலை, மகா அபிேஷகம், வெள்ளி, தங்க கவச சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. பொள்ளாச்சி ஏரிப்பட்டி காமாட்சி அம்மன் கோவிலில், கடந்த, 27ம் தேதி சித்ரா பவுர்ணமி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கணபதி ேஹாமம், சக்தி கும்பம் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 11:00 மணிக்கு திருக்கல்யாணம், மாலையில் அம்மன் திருவீதி உலா மற்றும் மகா அபிேஷகமும் நடந்தது. கோட்டூர் மலையாண்டிபட்டிணம் செல்லமுத்து நகர், ஆதிஅமர நாயகி உடனமர் ஆதிசங்கரர் கோவிலில் சித்திரை திருவிழா நடந்தது. விழாவில் நேற்று, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !