உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கத்தில் கஜேந்திர மோட்சம்

ஸ்ரீரங்கத்தில் கஜேந்திர மோட்சம்

திருச்சி: சித்ரா பவுர்ணமியையொட்டி, திருச்சி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில், கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி நடந்தது. ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து, காலை, 7:30 மணிக்கு, மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள், வழி நடை உபயங்கள் கண்டருளி, அம்மா மண்டபம் படித்துறையில் உள்ள, ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு, பகல் 12:00 மணி முதல், 2:00 மணி வரை, திருமஞ்சனம் கண்டருளினார். மாலை, 6:15 மணிக்கு, காவிரி ஆற்றுக்கு சென்ற நம்பெருமாள், கோவில் யானை ஆண்டாளுக்கு, கஜேந்திர மோட்சம் அளித்தார். இரவு, 8:15 மணிக்கு, அம்மா மண்டபத்தில் இருந்து புறபட்ட நம்பெருமாள், 9:00 மணிக்கு, மூலஸ்தானத்தை சென்றடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !