திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :2756 days ago
திருக்கனுார்: கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவிலில், சுவாமி திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, தினமும் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து, திரவுபதியம்மன்- அர்ஜூனன் சுவாமி திருக்கல்யாண உற்சவம், நேற்று மதியம் 1:00 மணிக்கு நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முக்கிய நிகழ்வாக, நாளை காலை 10:00 மணிக்கு தேர் வீதியுலா நடக்கிறது. தொடர்ந்து வரும் 2ம் தேதி காலை 10:00 மணிக்கு ஊரணி பொங்கல் நிகழ்ச்சியும், மாலை 6:00 மணிக்கு தீமிதி விழா நடக்கிறது.