பரமக்குடி கோயிலில் சந்தன அபிஷேகம்
ADDED :2756 days ago
பரமக்குடி: ரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவில், நேற்று சுந்தரராஜப் பெருமாள், கருப்பணசாமிக்கு சந்தன அபிஷேகம் நடந்தது.
நேற்று காலை 9:00 மணிக்கு யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் புறப்பாடாகி,உற்ஸவர் சுந்தரராஜப் பெருமாள், மூலவர் பரமஸ்வாமி, காவல் தெய்வம் கருப்பணசாமிக்குகும்ப திருமஞ்சனம் நடந்தது.பின்னர் பக்தர்கள் இளநீர் காவடி, சந்தனகுடம் ஏந்தி வந்து சிறப்பு அபிஷேகம்நடத்தப்பட்டது. மேலும் இரவு 7:00 மணிக்கு கருப்பணசாமிக்கு சந்தன அபிஷேகம்நடந்தது. பக்தர்கள் கோயில் வளாகத்தில் மாவிளக்கு வழிபாடு நடத்தினர்.